மனைவியின் தலையில் கல்லால் அடித்து கொலை செய்த கணவன்! பெற்றோரும் சேர்ந்து நடத்திய கொடூரம்!
Karnataka Husband kill wife
மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை: கணவர் வெறிச்செயல்!
கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தில் குழந்தை இல்லாதது காரணமாக மனைவியை கொலை செய்த கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதானி தாலுகாவைச் சேர்ந்த சந்தோஷ், மலபாடி கிராமத்தில் வசிக்கிறார். அவருக்கும் அவரது மனைவி ரேணுகாவுக்கும் (34) திருமணமாகி நீண்ட ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால், தம்பதிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தது.
மே 17ஆம் தேதி, கிராமத்திற்கு அருகே உள்ள சாலையில், ரேணுகா தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விபத்தாக நடந்ததென கூறி, "சைக்கிளில் சென்றபோது சேலை சக்கரத்தில் சிக்கி விழுந்ததால் இறந்துவிட்டார்" என்று சந்தோஷும் அவரது தந்தை காமண்ணாவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
ஆனால், போலீசாருக்கு இது தொடர்பாக எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. பிரேதப் பரிசோதனை மற்றும் தீவிர விசாரணையில், சந்தோஷ் மற்றும் அவரது பெற்றோர் ரேணுகாவை திட்டமிட்டு கல்லால் தலையில் அடித்தும் சேலையில் கழுத்து நெரித்தும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
மூவரும் கைது செய்யப்பட்டு, இந்த பயங்கர சம்பவம் ஊரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Karnataka Husband kill wife