தன் வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தாமாகவே பிடித்த நடிகர் சோனு சூட்...! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்...!
Actor Sonu Sood caught snake that entered his house Fans amazed
பிரபல பாலிவுட் நடிகர் 'சோனு சூட்' அவர்கள் தான் தங்கி இருக்கும் வீட்டு வளாகத்திற்குள் வந்த ஒரு பாம்பை தனது வெறும் கைகளால் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும், இந்த வீடியோ காட்சிகளை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்ட அவர், அது ஒரு ஜெர்ரிபோட்டு வகை பாம்பு என்றும், அது விஷத்தன்மை வாய்த்தது அல்ல என்றும் பதிவிட்டுள்ளார்.
அதே சமயம், பாம்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தும் உள்ளார்.அதுமட்டுமின்றி, இதுபோன்று வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளைப் பிடிக்க நிபுணர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்றும் தான் செய்ததை பின்பற்ற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், சோனு சூட் தமிழில் நெஞ்சினிலே, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Actor Sonu Sood caught snake that entered his house Fans amazed