AK64| அஜித் = ஆதிக் கூட்டணியில் புதிய திரைப்படம் உறுதியானது! முக்கிய வேடத்தில் மோகன்லால்!
AK 64 adhik ravichandran new movie
குட் பேட் அக்லி வெற்றியைத் தொடர்ந்து, அஜித் குமாரின் அடுத்த திரைப்படமான AK64-ஐ ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து ஆதிக் மேலும் தெரிவிக்கையில், "இது கேங்ஸ்டர் படம் அல்ல. முற்றிலும் புதிய பார்வையில் இருக்கும். ரசிகர்களுக்குப் புதுமையான அனுபவமாக அமையும்" என தெரிவித்துள்ளார்.
படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. Good Bad Ugly படக்குழுவிலிருந்து சில முக்கிய உறுப்பினர்கள் மீண்டும் இந்த படத்திற்காக இணைகிறார்கள்.
ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்க, சுப்ரீம் சுந்தர் சண்டை அமைப்பாளராக பணியாற்றுகிறார். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முக்கிய வேடங்களில் மோகன்லால் நடிப்பார் என தகவல்கள் வலுப்பெறுகின்றன.
அஜித் மற்றும் ஆதிக் இருவருக்கும் இந்த திரைப்படம் மற்றொரு வெற்றி படமாக அமையும் என ரசிகர்கள் உறுதியுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
AK 64 adhik ravichandran new movie