ஐகோர்ட் உத்தரவு..திமுகவுக்கு பேரிடி!
High Court order a disaster for DMK
ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் போது பொதுமக்களிடம் OTP பெற தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூலை 3-ம் தேதி சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாக சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு என்ற திடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திமுக நிர்வாகிகள், வீடு வீடாகச் சென்று, மக்களைச் சந்தித்து கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் தி.மு.க. சார்பில் நடைபெற்று வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின் போது, ஆதார் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களை கேட்டு பொதுமக்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதையடுத்து ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையின்போது, பொதுமக்களிடம் ஆதார் விவரங்களை சேகரிக்க தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஐகோர்ட்டில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது ,வீடு வீடாகச் செல்லும் தி.மு.க.வினர், ஆதார் எண், வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு விவரம், மொபைல் எண்கள் கேட்கிறார்கள்.
மறுத்தால், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என மிரட்டுகிறார்கள் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.மேலும், அனுமதி இன்றி முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,
ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தலாம். ஆனால் ஓடிபி கேட்கக்கூடாது என்று தெரிவித்து ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்புக்கு பொதுமக்களிடம் OTP பெற தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், இதுதொடர்பாக மத்திய அரசு, தி.மு.க. பொதுச்செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.
English Summary
High Court order a disaster for DMK