மும்பை ரெயில் வெடிப்பு வழக்கில் அதிரடி திருப்பம்..தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரும் விடுதலை..நடந்தது என்ன?
A shocking turn in the Mumbai train blast case 12 people sentenced have been released What happened?
மும்பை ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை என கூறிய ஐகோர்ட்டு கோர்ட்டு, தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்தது.
2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மராட்டிய மாநிலம் மும்பை புறநகர் ரெயில்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 189 பேர் உயிரிழந்தனர்.820 பேர் படுகாயமடைந்தனர்.இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு லஷ்கர் இ குவாகர் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
மேலும் தொடர்பாக கமல் அன்சாரி, முகமது பைசல், குட்புதின் சித்திக், முகமது, சமீர் அகமதுஉள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தநிலையில் 12 பேரும் குற்றவாளிகள் என்று 2015ம் ஆண்டு மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகளில் 5 பேருக்கு தூக்கு தண்டனையும், எஞ்சிய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.
இதையடுத்து தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி 12 பேரும் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தண்டனை பெற்ற 12 பேரையும் விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவால் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் எஞ்சிய 11 பேரும் விடுதலை செய்யப்பட உள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட 12 பேர் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை என கூறிய ஐகோர்ட்டு கோர்ட்டு, வழக்கில் சிறப்பு கோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்தது.
English Summary
A shocking turn in the Mumbai train blast case 12 people sentenced have been released What happened?