அன்று கிளீனராக தொடங்கி இன்று காரோனராக புகழ்! பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழ்!
Started as a cleaner then and now a coroner Cook with clown fame who bought a luxury car worth millions
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த நடிகரும் நகைச்சுவையாளருமான புகழ், தற்போது சினிமா உலகில் தனது உச்சியை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவர் தற்போது ஒரு லிமிட்டெட் எடிஷன் சொகுசு காரை வாங்கியுள்ளார் என்ற தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடலூரில் பிறந்து வளர்ந்த புகழ், சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற கனவை மனதில் வைத்து சென்னை வந்தார்.
ஆனால், ஆரம்பத்தில் வாய்ப்புகள் கிடைக்காததால் கார் மற்றும் லாரி கிளீனராகவும், ஹோட்டலில் சர்வராகவும் வேலை செய்தார். அந்த வேலைகளில் கிடைத்த சிறிய சம்பளத்தையே பயன்படுத்தி சினிமா வாய்ப்புகளை தேடினார்.
அந்த சமயத்தில் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். இதுவே அவருக்கு சினிமா துறையில் கதவைத் திறந்தது.
அந்த கடினமான நாட்களில் புகழுக்கு துணையாக இருந்தவர் வடிவேல் பாலாஜி.அவரின் குடும்பத்துக்கு இன்று வரை உதவி செய்து வருவது, புகழின் நன்றியுணர்வை காட்டுகிறது.
புகழின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிதான்.அந்த நிகழ்ச்சியில் வெளிப்பட்ட அவரது நகைச்சுவை திறமையால் அவர் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றார்.அதன் பின்னர், சினிமா உலகிலும் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன.
புகழ் இதுவரை ‘சிக்ஸர்’, ‘தா தா 87’, ‘கைதி’, ‘வலிமை’, ‘அயோத்தி’, ‘டிஎஸ்பி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
ஹீரோவாக நடித்து ‘ஜூ கீப்பர்’ படத்தில் நடித்த புகழ், தற்போது மேலும் சில ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் நடித்து வருகிறார்.
நகைச்சுவை துறையில் சந்தானம் விட்ட இடத்தை புகழ் நிரப்பி வருகிறார் என ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.
சமீபத்தில் புகழ் தனது மனைவியுடனும் மகளுடனும் சேர்ந்து ரூ.33 லட்சம் மதிப்புள்ள மஹிந்திரா நிறுவனத்தின் ‘Batman Edition’ காரை வாங்கியுள்ளார்.இந்த கார் உலகம் முழுவதும் வெறும் 999 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புகழ் தனது புதிய காருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்,அதில் அவர் மற்றும் அவரது குடும்பம் கார் அருகே மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ளனர்.
புகழின் இந்த சாதனைக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெருமையுடன் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.“கிளீனராக இருந்து காரோனராக ஆன மனிதர் நீங்க தான்!”“உழைப்புக்கு கிடைத்த பலன் இது”என்று ரசிகர்கள் புகழைப் பாராட்டி வருகின்றனர்.
சமூகத்தின் அடித்தட்டில் இருந்து உழைப்பாலும் நம்பிக்கையாலும் உச்சியை அடைந்தவர் புகழ்.அவரின் வாழ்க்கை பயணம் “உழைப்பால் முடியாதது எதுவும் இல்லை” என்ற உண்மைக்கான உயிர்ப்புடன் நிற்கும் சான்றாக மாறியுள்ளது.
இப்போது புதிய காருடன் புதிய இலக்குகளை நோக்கி பறக்கத் தயாராகியுள்ள ‘குக் வித் கோமாளி’ புகழ்,சினிமா உலகில் இன்னும் பல உச்சிகளைத் தொட்டிட ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.
English Summary
Started as a cleaner then and now a coroner Cook with clown fame who bought a luxury car worth millions