தங்கம் விலை பறக்குது… நகைப்பிரியர்கள் திக்குமுக்காடுகிறார்கள்...! இன்றைய நிலவரம்...? - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில், கடந்த சில வாரங்களாக வானில் பறந்த தங்க விலை, திடீரென கீழிறங்கியபோது நகை வாங்கத் தயாராக இருந்த மக்களுக்கு அதிரடியான நிம்மதியை அளித்தது. ஆனால், விலை மேலும் உயரும் என நம்பி முதலீடு செய்தவர்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

நேற்று முன்தினம் (09.11.2025) தங்கம் ஒரு கிராம் ரூ.11,300க்கும், ஒரு சவரன் ரூ.90,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அதற்கடுத்த நாள் (10.11.2025) தங்க விலை திடீரென ரூ.180 உயர்ந்து கிராமுக்கு ரூ.11,480, சவரனுக்கு ரூ.91,840 எனப் பதிவானது.வெள்ளியும் தங்கத்தைப் போலவே பாய்ந்தது. 09.11.2025 அன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.165, கிலோ ரூ.1,65,000 என்ற விலையில் இருந்தது.

அதற்கடுத்த நாள் ரூ.4 உயர்ந்து கிராமுக்கு ரூ.169, கிலோவுக்கு ரூ.1,69,000 என உயர்ந்தது.இந்நிலையில், இன்று (11.11.2025) தங்கம் மேலும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ரூ.11,700க்கும், சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.93,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் இதன் பின் தொடர்கிறது; கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.170 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,70,000 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
கடந்த சில நாட்களின் தங்க விலை நிலவரம் (சவரன் அடிப்படையில்):
11.11.2025 – ரூ.93,600 (இன்று)
10.11.2025 – ரூ.91,840
9.11.2025 – ரூ.90,400
8.11.2025 – ரூ.90,400
7.11.2025 – ரூ.90,160
6.11.2025 – ரூ.90,560
தங்கம் விலை இவ்வாறு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை நோக்கி பாய்ந்துகொண்டிருப்பது நகை பிரியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold prices soaring Jewelry lovers shock Todays situation


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->