ஈரோடு அருகே கொடூர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!
Erode Kankeyam Road Accident
கேரள மாநிலம் மறையூரைச் சேர்ந்த ராஜா (46), அவரது மனைவி ஜானகி (40), மகள்கள் மாநேத்ரா (15) மற்றும் மவுனஸ்ரீ (11) ஆகியோர், ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் தங்கியிருந்து வாழ்ந்து வந்தனர். ஜானகி அங்கு உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
சமீபத்தில் குடும்பத்துடன் கேரளா சென்றுவிட்டு, இன்று அதிகாலை அறச்சலூருக்குத் திரும்பி வந்தனர். காங்கயம் அருகே நத்தக்காடையூரில் காரை ஓட்டி வந்த ராஜா, கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.
இந்த பயங்கர விபத்தில் ராஜா மற்றும் ஜானகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மாநேத்ரா மற்றும் மவுனஸ்ரீக்குத் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. ஆனால், மாநேத்ரா வழியிலேயே உயிரிழந்தார். மவுனஸ்ரீ தற்போது திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைபெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து போலீசார் தெரிவிக்கையில், “விபத்து நேரம் அதிகாலை என்பதால், தூக்க கலக்கம் காரணமாக காரை மரத்தில் மோதி இருக்கலாம்” எனத் தெரிவித்தனர். மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
English Summary
Erode Kankeyam Road Accident