விஜய்யின் 'ஜனநாயகன்' படம் 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்க்கா? – முக்கிய அப்டேட்! - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என பலராலும் பரப்பப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முக்கிய தகவல் இணையத்தில் தற்போது கசியியுள்ளது.

‘ஜனநாயகன்’ படம் ஆரம்பிக்கப்பட்டது முதலே இது பகவந்த் கேசரி படத்தின் தமிழாக்கம் என கூறப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, ஜனநாயகன் ஒரு முழு ரீமேக் அல்ல. உண்மையில், அந்தத் தெலுங்குப் படத்திலிருந்து ஒரே ஒரு காட்சி மட்டும் இந்த படத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த காட்சிக்காக, படக்குழு முழு ரீமேக் உரிமையையும் ரூ.4.5 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த ஒரு காட்சி மட்டுமே பகவந்த் கேசரியுடன் ஜனநாயகனுக்கு தொடர்புள்ளதாக தகவல்கள் உறுதிபடுத்துகின்றன.

‘பகவந்த் கேசரி’ படத்தில் இடம்பெற்ற ‘குட் டச் பேட் டச்’ என்ற விழிப்புணர்வு காட்சி, விஜயை ஆழமாகக் கவர்ந்ததாம். அந்த காட்சியை ‘ஜனநாயகன்’ படத்திலும் சேர்க்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனாலேயே அந்தக் காட்சி உரிமையை படக்குழு வாங்கியுள்ளது.

எச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்குள் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசை அமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பு: வெங்கட் கே நாராயணன் (KVN Productions)
ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்
சண்டைப் பயிற்சி: அனில் அரசு
கலை இயக்கம்: வி.செல்வகுமார்

விஜய்க்கு துணையாக, இந்தப் படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

விஜய் தனது அரசியல் பயணத்திற்காக சினிமாவை விலகும் முன் நடிக்கும் கடைசி திரைப்படம் என்பதால், ‘ஜனநாயகன்’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. திரைப்படத்திற்கான வசூல் எட்டுமுடியாத உயரம் – 1000 கோடி வசூல் – என்ற நிலை வரை பேசப்படுகிறது.

வெளியீட்டு தேதி அறிவிப்பு‘ஜனநாயகன்’ திரைப்படம், 2026ம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த தகவல், விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகமே எதிர்பார்த்து இருக்கும் ஒரு முக்கியமான அப்டேட்டாக அமைகிறது. 'பகவந்த் கேசரி' காட்சியால் மட்டுமே இணைப்பாகியுள்ள ‘ஜனநாயகன்’, ஒருமித்த கதையம்சத்துடன் தனிச்சிறப்பை கொண்டு வருகிறது என உறுதியாகக் கூறலாம்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Vijay Jananayagan a remake of Bhagavanth Kesari Important Update


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->