ஐபிஎல் பிளேஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு!
IPL 2025 play off Final match
இந்த ஆண்டு ஐபிஎல் பிளேஆஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும் இடங்களை ஐபிஎல் நிர்வாகம் மே 20 அன்று அறிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதற்றத்தால் ஐபிஎல் தொடரில் இடைவேளை ஏற்பட்டது. மீண்டும் மே 17 ஆம் தேதியுடன் தொடர் தொடர்ந்தது. பின்னர் பிசிசிஐ வெளியிட்ட புதிய அட்டவணையில் பிளேஆஃப் போட்டிகளுக்கான இடங்கள் குறிப்பிடப்படாமல் இருந்தன.
இப்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பின் படி, பிளேஆஃப் போட்டிகள் முல்லான்பூர் மற்றும் அகமதாபாதில் நடைபெற உள்ளன. குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் மே 29, 30 ஆகிய தேதிகளில் முல்லான்பூரில் நடத்தப்படுகின்றன. ஜூன் 1ஆம் தேதி குவாலிஃபையர் 2 மற்றும் ஜூன் 3ஆம் தேதி இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறும்.
இதனிடையே, பெங்களூருவில் நடைபெறவிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கான மே 23 போட்டி, மழை அபாயத்தை முன்னிட்டு லக்னௌவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
2022, 2023 ஆண்டுகளுக்குப் பிறகு, தொடர்ந்து மூன்றாவது முறையாக அகமதாபாத், ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான மேடையாக அமைகிறது.
English Summary
IPL 2025 play off Final match