விஜய் மீது தப்பில்லை! கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் முதல் குற்றவாளி கரூர் எஸ்.பி – உடனடி நடவடிக்கை தேவை-எச்.ராஜா! - Seithipunal
Seithipunal


கரூரில் த.வெ.க தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியாகி நாடையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இன்று காரைக்குடியில் நடந்த தனது 69வது பிறந்தநாள் விழாவில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, கரூர் விபத்துக்கு திமுக அரசு மற்றும் காவல்துறை தான் முழு பொறுப்பு என குற்றம் சாட்டினார்.

அவர் கூறியதாவது:“கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்திற்கு முதல் குற்றவாளி கரூர் எஸ்.பி தான்.அந்த நிகழ்ச்சிக்கான பாதுகாப்பை வழங்காதது காவல்துறையின் பெரும் தவறு.எனவே கரூர் எஸ்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்து, கைது செய்து, விசாரணை நடத்த வேண்டும்,” என எச்.ராஜா வலியுறுத்தினார்.

அதே நேரத்தில், த.வெ.க தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க வரும் அக்டோபர் 17ஆம் தேதி கரூருக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்கப்படலாம் என்ற செய்தியையும் குறித்து எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:“விஜய் கரூர் செல்வதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியமே இல்லை.
அரசியலில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் செல்லும் உரிமை உண்டு,” என்றார்.

இதனுடன், திமுக அரசின் ஆட்சியை கடுமையாக விமர்சித்த எச்.ராஜா,“திமுக தொடர்ந்து மக்களை ஏமாற்றும் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது.
இதே போக்கு தொடர்ந்தால் 1991ல் நடந்தது போலவே, 2026 தேர்தலிலும் மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள்,” என்றார்.

அதுமட்டுமல்லாமல்,“2026 மே மாதத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சி அமைக்கும்,” எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அரசியலையும் அவர் விமர்சித்தார்.“ஆணவப் படுகொலைகள் குறித்து பேசும் திருமாவளவன் தான் உண்மையில் ஆணவம் நிறைந்த அரசியல்வாதி.சென்னையில் நடந்த வாகன விபத்தில் மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்சனை அப்போதே முடிந்திருக்கும்.
ஆனால் அதனை பெரிதாக்கியதே பிரச்சனை. நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் மீது நடந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
இதில் ஈடுபட்ட அனைவரையும் அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்,” எனக் கூறினார்.

அதேபோல், திமுக இளைஞர் செயலாளர் உதயநிதியையும் கடுமையாக விமர்சித்த அவர்,“உதயநிதிக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி தான்.

தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களில் சாதி வெறி அதிகரிப்பதற்குக் காரணம் திமுக அரசு தான்,” எனக் குற்றஞ்சாட்டினார்.அவரது உரையின் இறுதியில் எச்.ராஜா தெரிவித்தார்:“தெருப் பெயர்களில் சாதி பெயர்களை நீக்கியாலும் மக்களின் மனதில் உள்ள உணர்வுகளை மாற்ற முடியாது,” என்றார்.

கரூர் கூட்ட நெரிசல் விபத்து குறித்து அரசை நேரடியாக குறிவைத்து எச்.ராஜா தெரிவித்த இந்தக் கருத்துகள்,
தற்போதைய அரசியல் சூழலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No escape for Vijay Karur SP is the prime culprit in Karur stampede accident ​​Immediate action required H Raja


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->