'பராசக்தி' மாபெரும் வெற்றி... கொண்டாடிய படக்குழு!
Parasakthi Team Celebrates Box Office hit
இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்த 'பராசக்தி', ஹிந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவானது.
விமர்சன ரீதியாகக் கலவையான கருத்துகளைப் பெற்ற போதிலும், வசூலில் இப்படம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
உலக அளவில் இப்படம் 51 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்புத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோர் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனை நேரில் சந்தித்துத் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
அரசியல் பின்னணி கொண்ட இப்படத்திற்கு மக்கள் அளித்துள்ள ஆதரவு படக்குழுவினருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Parasakthi Team Celebrates Box Office hit