''மேடையில் எனக்கு அண்ணன் மாதிரி, தம்பி மாதிரி அப்டி இப்டினு அழுவிட்டு, பின்னர் நடுரோட்டில் விட்டுவிடுவார்கள்."; ஜன நாயகன் குறித்து பேசுகையில் எஸ்.கே.வை விமர்சித்துள்ள ஞானவேல் ராஜா..!
Gnana Vel Raja has criticized SK while speaking about Jananayagan
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. விஜய்யின் கடைசி படமான இந்த படத்தை பொங்கலை முன்னிட்டு ஜனவரி 09 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திற்கான தணிக்கை பிரச்சனையால் தற்போதுவரை படம் வழியவில்லை. தணிக்கை சான்றிதழ் விவகாரம் தொடர்பில், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறிமாறி விசாரணை தொடர்கிறது. இதனால் மீண்டும் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியவில்லை.
ஆனால், சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் குறிப்பிட்ட தேதியில், ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பராசக்தி படத்தின், இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்த சிவகார்த்திகேயன், தொடக்கத்தில் பராசக்தி படத்தை தீபாவளி அல்லது அக்டோபரில் வெளியிடத்தான் திட்டமிடப்பட்டது. ஆனால், விஜய்யின் படமும் அதே நேரத்தில் வெளியாகும் என்று ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்தோம்.

இதனைத் தொடர்ந்து, ஜன நாயகன் வெளியீட்டை பொங்கல் திருநாளுக்கு மாற்றியிருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஜனவரி 09-இல் ஜன நாயகனை கொண்டாடுங்கள். 33 ஆண்டுகளாக திரைத் துறையில் நம்மை மகிழ்வித்தவரின் கடைசிப் படம். அதற்கு அடுத்த நாளான ஜன.10-இல் பராசக்தியை கொண்டாடுங்கள். இந்தப் பொங்கல், அண்ணன் தம்பி பொங்கல் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 'ஜன நாயகன்' விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில் கூறியுள்ளதாவது: 'ஜன நாயகன்' வெளிவராதது மிகப்பெரிய வருத்தம். இந்த நேரத்தில் நாமும் சப்போர்ட்டாக இருந்து உதவி செய்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ''மேடையில் அழுதுவிட்டு, எனக்கு அண்ணன்மாதிரி, தம்பிமாதிரி அப்டி இப்டினு அழுவிட்டு, பின்சென்று நடுரோட்டில் விட்டுவிடுவார்கள்." என சிவகார்த்திகேயனை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.
இதற்கு முன்னதாக 2019-இல் வெளியான 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்திற்காக பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில், ரூ.04 கோடியை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இன்னும் வழங்கவில்லை என்று சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதற்கு ஞானவேல்ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளதும், இந்த வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Gnana Vel Raja has criticized SK while speaking about Jananayagan