இந்திய சாலைகளில் 5 லட்சம் கனெக்டட் கார்கள் – கியா இந்தியா புதிய மைல்கல்! விற்பனை எவ்வளவு தெரியுமா?
5 lakh connected cars on Indian roads Kia India hits new milestone Do you know how much it sold
இந்திய சந்தையில் கனெக்டட் கார்களின் பயன்பாடு வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கியா இந்தியா ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. இந்திய சாலைகளில் தற்போது கியா நிறுவனத்தின் 5,00,000 கனெக்டட் கார்கள் ஓடிக்கொண்டிருப்பதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் கியாவின் நவீன இன்டெலிஜென்ட் மொபிலிட்டி தொழில்நுட்பங்களை பெரிதும் ஏற்றுக்கொண்டதே இந்த சாதனைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கியா இந்தியாவின் உள்நாட்டு விற்பனையில் கனெக்டட் வேரியண்ட்கள் தற்போது சுமார் 40 சதவீத பங்கைக் கொண்டுள்ளன. இது, இந்திய வாடிக்கையாளர்கள் பாரம்பரிய வசதிகளைத் தாண்டி, தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்பு மற்றும் வசதி அம்சங்களை அதிகமாக விரும்பத் தொடங்கியிருப்பதை வெளிப்படுத்துகிறது.
இந்த சாதனையில் கியா செல்டோஸ் மாடல் முக்கிய பங்கு வகித்துள்ளது. மொத்த கனெக்டட் கார் விற்பனையில் சுமார் 70 சதவீதம் செல்டோஸ் மாடலின் பங்களிப்பாகும் என கியா தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சோனெட் மற்றும் காரன்ஸ் மாடல்களும் கனெக்டட் கார் விற்பனையை உயர்த்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. கியா வழங்கும் கனெக்டிவிட்டி அம்சங்களால் திருப்தி அடையும் வாடிக்கையாளர்கள், மீண்டும் கியா கார்களையே தேர்வு செய்வதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பான மற்றும் எளிதான பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில், கியா தொடர்ந்து தனது தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருகிறது. கனெக்டட் கார்களில் அப்டேட் செய்யப்பட்ட நெவிகேஷன், தடையற்ற இணைப்பு, மற்றும் ஓவர் தி ஏர் (OTA) மென்பொருள் அப்டேட்கள் முக்கிய அம்சங்களாக உள்ளன. தொழிற்சாலை தரத்திலேயே மென்பொருளை OTA முறையில் புதுப்பிக்கும் வசதி, ரிமோட் டயக்னாஸ்டிக்ஸ் மூலம் வாகன நிலை பரிசோதனை, மற்றும் டிஜிட்டல் கீ 2.0 மூலம் ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் வழியாக காரை அணுகும் வசதி ஆகியவை வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மேலும், 360 டிகிரி சரவுண்ட் வியூ மானிட்டர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் ஓட்டுநர்களுக்கு கூடுதல் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் வழங்குகின்றன. இதனுடன், கியா இந்தியா தனது எலக்ட்ரிக் வாகனங்கள் மூலமாக கனெக்டட் தொழில்நுட்பத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. EV பிரிவில் 100 சதவீத கனெக்டட் கார் பரவலை அடைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘டிரைவ் கிரீன்’ போன்ற இன்டராக்டிவ் அம்சங்கள் மற்றும் 7.4kW, 11kW போன்ற விருப்பங்களுடன் கிடைக்கும் ஸ்மார்ட் ஹோம் சார்ஜர்கள், எலக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்களுக்கான அனுபவத்தை மேலும் மேம்படுத்துகின்றன. இதன் மூலம், இந்தியாவில் கனெக்டட் மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டி சந்தையில் கியா இந்தியா தனது முன்னணியை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.
English Summary
5 lakh connected cars on Indian roads Kia India hits new milestone Do you know how much it sold