தவெக விஜய் தரப்பிற்கு ராகுல் காந்தி தந்த அதிர்ச்சி வைத்தியம்.. இப்படி பண்ணிட்டாரே! குஷியில் திமுக!
Rahul Gandhi shock treatment to Thaveka Vijay side He did this! DMK is happy
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று மேற்கொண்ட ஒரு செயல், தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை அரசியல் அதிகாரத்தின் துஷ்பயோகம் எனக் குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். திரையுலகின் பெரும்பாலானோர் வெளிப்படையாக கருத்து சொல்ல தயங்கிய சூழலில், காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது அரசியல் ரீதியாக பெரும் கவனத்தை ஈர்த்தது.
இதனிடையே, ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பதிவில், ஜனநாயகன் திரைப்படத்தைத் தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேற்கொள்வதாக கூறப்படும் முயற்சிகள் தமிழ் கலாச்சாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றும், அரசியல் ஆதாயங்களுக்காக கலைப் படைப்புகளை இலக்கு வைப்பதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். “மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள்” என அவர் பதிவிட்ட கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பின்னணியில், காங்கிரஸ் – தவெக கூட்டணி உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு தவெக தரப்பில் வலுத்திருந்ததாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி – விஜய் கரம் கோர்ப்பார்கள் என்ற கனவுகளும் பேசப்பட்டன. ஆனால், இன்று ராகுல் காந்தி மேற்கொண்ட செயல் அந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ராகுல் காந்தி இன்று நீலகிரி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ள புனித தாமஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். மைசூரிலிருந்து மாலை 3 மணிக்கு மேல் கூடலூர் வந்த அவர், சுமார் 4.30 மணியளவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொங்கல் விழா கொண்டாட்டங்களிலும் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியின் போது, திமுக மூத்த தலைவர் ஆ.ராசாவுடன் ராகுல் காந்தி நீண்ட நேரம் சிரித்தபடி நெருக்கமாக உரையாடினார். அரசியல் எல்லைகளைத் தாண்டிய நட்பான உரையாடலாக அது இருந்ததாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர். மேலும், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஒருவருடனும் ராகுல் காந்தி நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தது கவனிக்கப்பட்டது.
திமுக நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி வெளிப்படையாகவும் நெருக்கமாகவும் பழகிய இந்த காட்சிகள், காங்கிரஸ் – தவெக கூட்டணியை எதிர்பார்த்திருந்த தவெக தரப்பிற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. “கூட்டணிக்கு வருவார் என நம்பிய நிலையில், ராகுல் காந்தியின் இந்த செயல் தவெக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியாக அமைந்திருக்கலாம்” என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
Rahul Gandhi shock treatment to Thaveka Vijay side He did this! DMK is happy