தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!
No 1 Cyclone Warning Cage raised in Tamil Nadu and Puducherry
தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மாலை மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைய கூடும்.
இதனால் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீச கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் புயல் காரணமாக நாளை தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், நாளை மறுநாள் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி,பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி காரைக்கால், ஆகிய துறைமுகங்களில் 1-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
English Summary
No 1 Cyclone Warning Cage raised in Tamil Nadu and Puducherry