வேளாண்மை அமைச்சராக இருக்க தகுதியில்லை! கம்னியூஸ்ட்களுக்கு புரிதல் இல்லை - அன்புமணி இராமதாஸ் பேட்டி!
NLC PMK Strike Anbumani Ramadoss Press meet
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை கண்டித்தும், அதற்க்கு தமிழக அரசு துணை போவதை கண்டித்தும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தின் அணைத்து பகுதிகளும் வணிகர்கள் தங்களின் கடைகளை அடைத்து பாமகவின் போராட்டத்திற்கு ஆதரவை கொடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் குறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துவது, "வெற்றிகரமாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. மகிழ்ச்சியுடன் நான் இதை சொல்லவில்லை. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் இல்லை. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த போராட்டம்.

இது ஏதோ கடலூர் மாவட்டத்தின் 10, 15 கிராம மக்களின் பிரச்சனை இல்லை, கடலூர், விழுப்புரம், கள்ளகுறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர் உட்பட 5 மாவட்டங்களின் பிரச்சனை. தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை காட்டிலும் 100 மடங்கு பாதிப்பு இந்த எல்எல்சியால் ஏற்படுகிறது.
எல்எல்சி வருவதற்கு முன்பு அந்தபகுதியில் 8 அடியில் நிலத்தடி நீர் இருந்தது, தற்போது 1000 அடிக்கு சென்றுவிட்டது. என்எல்சியிடம் கைவசம் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில், அடுத்த 30 ஆண்டுகளுக்கு நிலக்கரி வெட்டி எடுக்க முடியும். பிறகு ஏன் புதிதாக விவசாய நிலங்களை கையகப்படுத்த என்எல்சிக்கு தமிழக அரசு துணை போகிறது.
2025 க்குள் என்எல்சி நிறுவனம் தனியாருக்கு விற்கப்பட இருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் சொல்லப்படுபவை 100 சதவீதம் உண்மையாகவே இருக்கும்.
2040 ல் தமிழகத்தை கார்பன் உமிழ்வு இல்லாத மாநிலமாக்குவோம் என்று கூறும் முதல்வர், நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியை எரித்து காற்று, மண், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தி மின்சாரத்தை தயாரிக்க காரணமாக இருக்கின்றார். ஏன் இந்த முரண்பாடான கொள்கை.

எல்லாவற்றிலும் மத்திய அரசை எதிர்க்கும் திமுக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்தலில் மட்டும் மத்திய அரசை ஆதரிப்பது ஏன்?
வேளாண்துறை அமைச்சரே, விவசாய நிலத்தை பிடுங்கி கொடுப்பது வெட்கக்கேடு, வேளாண்துறை அமைச்சராக இருக்க எம்ஆர்கே.பன்னீர்செல்வத்திற்கு தகுதி கிடையாது.
கம்யூனிஸ்ட் கட்சியினர் இதை 10,15 கிராம பிரச்சனையாக மட்டும் பார்க்கின்றனர். முறையான புரிதல் அவர்களுக்கு இல்லை, இது குறிப்பிட்ட பகுதியின் பிரச்சனை மட்டும் இல்லை. எனவே இதை வேலைவாய்ப்பு சார்ந்த பிரச்சனையாக பார்க்க கூடாது" என்றார்.
English Summary
NLC PMK Strike Anbumani Ramadoss Press meet