நோ சூடு..நோ சுரணை.. கல்யாணத்தில் வைக்கப்பட்ட நித்தி பேனர்.! ருசிகர பின்னணி.!  - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில், லால்குடி அருகே பல்லவபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் விஜி ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. அப்போது மண்டபத்தின் வாசலில் நித்யானந்தாவின் புகைப்படங்கள் சிரித்த முகத்துடன் இருக்குமாறு பேனர்களில் அச்சடிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து பேனர் வைத்த இளைஞர்களிடம் விசாரிக்கையில், "தற்போது உள்ளவர் நித்யானந்தா. அவர்தான் வித்தியாசமாக இருக்கிறார். எனவே, அவருடைய போட்டோவை நாங்கள் பேனரில் அச்சடித்து இருக்கின்றோம். அவர் குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்தவர். கைலாஸாவில் அவர் இருக்கிறேன் என்று கூறுகிறார். 

அது எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் நாங்களும் செல்வோம். அவர் பிடித்ததை செய்கிறார். ஜாலியாக இருக்கிறார். எனவே அவரை எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. மேலும், நித்தியானந்தா "நோ சூடு நோ சொரணை." என்று அடிக்கடி தெரிவிப்பார். அது எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

நாங்களும் அவரைப் போலவே யார் சொல்வதையும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைய விரும்புகிறோம்." என்று மிகவும் சீரியசாக தெரிவித்து இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nithiyanantha fans marriage in trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->