சிறுமி பாலியல் வன்கொடுமை..போலி சாமியார் கைது!
Sexual abuse of a minor Fake priest arrested
ராஜஸ்தானில் ஆன்மீக சடங்கு செய்வதாக கூறி சிறுமியை 3 நாட்களாக தொடர் பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில், தாந்த்ரீகர் என்று கூறிக்கொண்டு வலம் வந்த பிரஹலாத் மேஹர்,ஜூன் 22 அன்று ராய்ப்பூர் அன்று சிறுமியை தனது ஆசிரமத்திற்கு அழைத்து சென்றுள்ளார்,
41 வயதான மேஹர், சிறுமியின் குடும்பத்திடம், அவளுக்கு ஏற்பட்ட துஷ்ட சக்திகளின் தாக்கத்தை நீக்க சடங்குகள் செய்வதாகவும், குடும்பக் கடன்களைத் தீர்க்க உதவுவதாகவும் உறுதியளித்து,அங்கு, இரவு வரை சிறுமிக்கு சடங்குகளைச் செய்வது போல் நடித்தார். அடுத்த நாள் ஜூன் 23 காலை சாமியாரும் சிறுமியும் அந்த இடத்திலிருந்து காணாமல் போயுள்ளனர்.
இந்தநிலையில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர். இதையடுத்து கடந்த வாரம் ஜூன் 26 ஆம் தேதி அஜ்மீர் மாவட்டத்தில் சிறுமியை போலீசார் மீட்டனர். சிறுமி கடத்தப்பட்ட மூன்று நாட்களுக்கும் மேலாக சாமியாரால் தொடர் பாலியல் வன்கொடுமை செய்ப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது. இதன்பின் சாமியார் திங்களன்று கைது செய்யப்பட்டார். போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
English Summary
Sexual abuse of a minor Fake priest arrested