மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மேகதாது அணை விவகாரம்!
The controversy over the Mekedatu dam is taking a new shape
கர்நாடக அரசு சத்தமின்றி மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் ஏற்கனவே தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே மோதல் போக்கு நிலவுகிறது கர்நாடக அரசு அணை கட்டிய தீர்வோம் என்று உறுதியாக உள்ளது, இதனால் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட் வரை மேகதாது அணை விவகாரத்தை கொண்டு சென்றது.
இந்தநிலையில் உபரி நீர் வீணாகாமல் தடுக்கவும் ராமநகர் மாவட்டம் மேகதாது எனும் இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்..மேலும் பெங்களூரு நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நீர்மின் நிலையம் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் நோக்கிலும், இந்த திட்டத்திற்காக மாநில அரசு ஏற்கனவே ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
இதுஒருபுறம் இருக்க கர்நாடக அரசு சத்தமின்றி மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அங்கு அணையின் நீர்த்தேக்க பகுதிக்கான நிலத்தை கணக்கிடும் பணி முடிந்துள்ளது. மேலும் அந்த நிலங்களை கையகப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும்இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா கூறுகையில், 'காவிரி தீர்ப்பாயத்தின்படி ஆண்டுக்கு கர்நாடகத்துக்கு காவிரியில் பங்கான 284 டி.எம்.சி.நீரை முழுமையாக பயன்படுத்துகிறோம்' என்றார்.
இதுகுறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் கேட்டபோது, 'கர்நாடகத்தில் தற்போது விவசாய நிலம் 6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கபினி அணையில் இருந்து பெறப்படும் உபரி நீரால் பாசன பகுதியில் விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்' என்றார்.
English Summary
The controversy over the Mekedatu dam is taking a new shape