ஜி.எஸ்.டி. ஒரு பொருளாதார அநீதி ..ராகுல் காந்தி கடும் விமர்சனம்!
GST is an economic injustice Rahul Gandhi's strong criticism
ஜி.எஸ்.டி. சட்டம் பொருளாதார சீர்திருத்தமல்ல, மோடி அரசின் “கொடூர ஆயுதம்” என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ‘
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ்’ சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்ட பதிவில் கூறியிருப்பதாவது.:"ஜி.எஸ்.டி. என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் யோசனை. ஆனால் மோடி அரசு அதனை தவறாக அமல்படுத்தியுள்ளது. இது ஒரு பொருளாதார அநீதியாகவும், கார்ப்பரேட்களுக்கு மட்டுமே சாதகமாகவும் செயல்படுகிறது."
மோடி அரசின் ஜி.எஸ்.டி. காரணமாக 18 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன,பொதுமக்கள் டீ முதல் காப்பீடு வரை உயர்ந்த வரி செலுத்துகின்றனர்,ஆனால், கார்ப்பரேட்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வரிச்சலுகை,பெட்ரோல், டீசல் ஆகியவை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் இல்லை – விவசாயிகள், டிரைவர்கள் பாதிப்பு,எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாக்கி கொடுப்பனவுகள் தாமதம்,பாப்கார்ன், கிரீம் பன் போன்றவை கூட வரிக்குள்ளாகும் நிலை
ஜி.எஸ்.டி. மீதான பொதுமக்கள், மாநிலங்கள் மற்றும் சிறு தொழில் உரிமையாளர்களின் ஆவேசத்தைக் குறிவைத்து, "ஜி.எஸ்.டி. முழுமையான மறுமதிப்பீடு தேவை" எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
English Summary
GST is an economic injustice Rahul Gandhi's strong criticism