டெல்லி முதல்வரை கன்னத்தில் அறைந்து, முடியை பிடித்து இழுத்து தகராறு செய்த நபர்: 'கோழைத்தனமான இந்த தாக்குதல் ஒருபோதும் என் மன உறுதியைப் பாதிக்காது' ரேகா குப்தா அதிரடி..! - Seithipunal
Seithipunal


டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று காலையில் சிவில் லைன்சில் உள்ள தனது இல்லத்தில் மக்கள் குறை கேட்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். அவர், மக்களிடம் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், முதலமைச்சர் ரேகா குப்தாவிடம் சில ஆவணங்களை கொடுத்துள்ளார். 

அதன் பின்னர் அவர் ரேகா குப்தாவை திடீரென தாக்கியுள்ளார். இதனால் அங்கு பெரும்பதற்றம் நிலவியது. குறித்த தாக்குதலில் ரேகா குப்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரேகா குப்தாவை தாக்கிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஷ் பாய் கிம்ஜி என்ற இவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மனு கொடுப்பது போல் டெல்லி முதல்வர் வீட்டுக்கு வந்து ரேகா குப்தாவின் கன்னத்தில் அறைந்துள்ளதோடு, அவரது முடியை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். இந்நிலையில், மூத்த தலைவரான ரேகா குப்தா தாக்கப்பட்டமை பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் 'என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது. இந்த தாக்குதல் ஒருபோதும் என் மன உறுதியைப் பாதிக்காது' என டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும், தெரிவித்துள்ளதாவது; 

"இன்று காலை பொது விசாரணையின் போது என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என் மீது மட்டுமல்ல, டெல்லிக்கும் மக்களின் நலனுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எங்கள் உறுதியின் மீதும் நடத்தப்பட்ட ஒரு கோழைத்தனமான முயற்சியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு நான் அதிர்ச்சியில் இருந்தேன், ஆனால், இப்போது நான் நன்றாக உணர்வதாகவும், அவரது அனைத்து நலம் விரும்பிகளும் தயவுசெய்து தன்னை சந்திக்க கவலைப்பட வேண்டாம் என்றும்  கேட்டுக்கொள்கிறேன் எனவும், தான் விரைவில் உங்களுடன் பணியாற்றுவதைக் காணலாம் என்று அறிவித்துள்ளார்.

அத்துடன், இதுபோன்ற தாக்குதல்கள் என் மன உறுதியையும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியையும் ஒருபோதும் உடைக்க முடியாது என்றும், இப்போது நான் முன்பை விட அதிக ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் உங்களுடன் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொது விசாரணைகள் மற்றும் பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பது முன்பு போலவே அதே தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் தொடரும் என்றும், உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனது மிகப்பெரிய பலமாகும் என்றும் கூறியுள்ளார். அத்துடன், உங்கள் மகத்தான அன்பு, ஆசீர்வாதம் மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ரேகா குப்தா மேலும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rekha Gupta said that this cowardly attack on me will never affect my morale


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->