குளித்தலை அருகே பள்ளி தாளாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு - 9 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே காவேரி நகரை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சாவித்திரி. இவர் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

இவர்கள் இருவரும் குளித்தலை அருகே வை.புதூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 18-ந் தேதி கருணாநிதி வீட்டில் அதிகாலை 3 மணியளவில் காரில் வந்த 3 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கருணாநிதி, அவரது மனைவி மற்றும் மகள் உள்பட மூன்று பேரையும் கட்டிப் போட்டு 40 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் பணம் மற்றும் 3 கைப்பேசிகளை கொள்ளையடித்து விட்டு தப்பித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து கருணாநிதி போலீசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொள்ளையர்களைப் பிடிக்க குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். அதில் உள்ளூரை சேர்ந்த சிலர் கொள்ளையர்களுக்கு உதவியாக இருந்தது தெரியவந்தது.

அதை தொடர்ந்து போலீசார் கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருந்த  9 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்படி தலைமறைவாக உள்ள 3 கொள்ளையர்களையும் போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். அவர்களை பிடித்த பிறகு பல்வேறு உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nine peoples arrested for steal gold and money in karoor


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->