திட்டக்குடி அருகே கோர விபத்து: கார்கள் மீது அரசு பஸ் மோதியதில் 09 பேர் பரிதாப பலி..!
Nine people tragically died when a government bus collided with cars near Tittakudi
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் பகுதியில் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், எதிரே வந்த கார்கள் மீது மோதியதில் 09 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு விரைவு பஸ் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் என்ற இடத்திற்கு வந்த போது பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் நிலைகுலைந்த பஸ், சாலை தடுப்புகளை தாண்டி மறுதிசையில் எதிரே வந்த இரண்டு கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த கோர விபத்தில் 02 கார்களும் உருக்குலைந்துள்ளதோடு,09 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்தில் இறந்தவர்கள் யார் என்ற விபரம் குறித்தும் ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பல பணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
English Summary
Nine people tragically died when a government bus collided with cars near Tittakudi