பதற வைத்த பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவம் - கருக்கா வினோத்தை காவலில் எடுக்க என்.ஐ.ஏ முடிவு.!
NIA officers decide take custody into karukka vinoth
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை மீது கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசியதாக ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் மீது என்.ஐ.ஏ அதிகாரிகளும் கடந்த நவம்பர் 14- ம் தேதியன்று வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக சம்பந்த பட்ட ஆவணங்களை சென்னை காவல்துறை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்படைத்தது.
இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். அதன் ஒருபகுதியாக சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் ஒன்றரை மணிநேரம் சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்பவம் நடந்த நேரத்தில் பாதுகாப்பில் இருந்த ஆயுதப்படை காவலரை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே என்ஐஏ அதிகாரிகள் ரவுடி கருக்கா வினோத்தை நேரடியாக காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி என்.ஐ.ஏ கருக்கா வினோத்தை ஐந்து நாட்கள் காவலில் எடுக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
English Summary
NIA officers decide take custody into karukka vinoth