பிளஸ்-2 மாணவர்களுக்கு அடுத்த அப்டேட்...! - வரும் 13-ம் தேதி முதல் தற்காலிக சான்றிதழ் வழங்கல்...!
Next update Plus2 students Provisional certificates issued from 13th
தமிழகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இந்தாண்டு நடைபெற்ற தேர்வில் மொத்தமாக 95.20 சதவீத மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.இதில் மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் மாணவிகள் மீண்டும் சாதனைக்கொடி நாட்டி, மாணவர்களை விட அதிக தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளனர். கல்விக்க்களத்தில் பெண்களின் ஆதிக்கம் தொடர்ந்து வலுப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.அதிகளவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறப்பட்ட பாடங்களில் கணினி அறிவியல் முதலிடத்தை பிடித்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் தொழில்நுட்பக் கல்வி மீதான மாணவர்களின் ஆர்வம் அதிகரித்து வருவது வெளிப்படையாகியுள்ளது.மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தமிழ்நாடு தேர்வு முடிவுகள் இணையதளம், அரசுத் தேர்வுத்துறை இணையதளம்www.tnresults.nic.in மற்றும் டிஜிலாக்கர் தேர்வு முடிவுகள்www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மேலும், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் நேரடியாக மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர, பள்ளிகளில் சமர்ப்பிக்கப்பட்ட உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருந்த செல்பேசி எண்களுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வரும் 13-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக ஜூன் 28 முதல் ஜூலை 7 வரை துணைத்தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கடிதமும் வரவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
English Summary
Next update Plus2 students Provisional certificates issued from 13th