ஆகஸ்ட் 1 முதல் புதிய வரிவிதிப்பு உறுதி.. டிரம்ப் மீண்டும் தகவல்!
New tax implementation confirmed from August 1 Trump informs again
ஆகஸ்ட் 1 முதல் அதிக வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வரும் என்றும் அதில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதாவது எந்த நீட்டிப்புகளும் வழங்கப்படாது" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்று கொண்டார். அவர் பதவியேற்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார். அத்துடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியிலான வரி விதிப்பை அதிகப்படுத்தி அதிர்ச்சி அடை செய்தார். இதனால் இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் அதிருப்திய அடைந்தனர்.
மேலும் வரும் 9-ம் தேதி வரை வரி விதிப்பை நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.இந்தநிலையில் ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து 25% முதல் 40% வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஜப்பான், தென்கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்கதேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 கூடுதல் நாடுகளுக்கு டிரம்ப் அதிக வரிகளை விதித்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் அதிக வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வரும் என்றும் அதில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதாவது எந்த நீட்டிப்புகளும் வழங்கப்படாது" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
English Summary
New tax implementation confirmed from August 1 Trump informs again