ஊரடங்கில் புதிய தளர்வு.. எதற்கு அனுமதி.? எதற்கு அனுமதி இல்லை.? முழு விவரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று மதியம் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று மாலை அறிவித்தார்.

அதன்படி, பள்ளி, கல்லூரிகள் திறப்பு :

பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும். கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து மற்ற அனைத்து கல்லூரிகளும் பிப்ரவரி ஒன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு நீக்கம் :

ஜனவரி 28 ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது.

ஞாயிறு ஊரடங்கு ரத்து :

வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 30 ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு கிடையாது.

எதற்கெல்லாம் அனுமதி?

உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை நாடகம், போன்ற நிகழ்ச்சிகள் 50 சதவிகித பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொழுது போக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.

அரசு மற்றும் தனியார் பல்கலை கழகங்கள், கல்லூரிகள், தொழிற் பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் பிப்.1 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி. திருமணம் அதைச் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக 100 பேருக்கு மட்டும் அனுமதி. இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 50 பேருக்கு மட்டுமே அனுமதி.

சினிமா தியேட்டர் கட்டுப்பாடு தொடரும் :

சினிமா தியேட்டர்களில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50 சதவிகித பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

கேளிக்கை விடுதி, உடற்பயிற்சி கூடங்களில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. அழகு நிலையங்கள்,முடித்திருத்தகங்கள் ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. பொழுது போக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.

தொடரும் கட்டுப்பாடுகள் :

சமுதாய,கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும்.

மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை :

பொருட்காட்சிகள், அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி இல்லை.

ஓட்டல் கட்டுப்பாடு தொடரும் :

உணவகம், விடுதிகள், பேக்கரிகள், அடுமனைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவருந்த அனுமதி.

பிப்ரவரி 15 ஆம் தேதி வரை எதற்கெல்லாம் கட்டுப்பாடு?

அழகு நிலையங்கள்,முடித்திருத்தகங்கள் ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உணவகம், விடுதிகள், பேக்கரிகள், அடுமனைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new relaxation in tamilnadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->