நெல்லை : ஓடும் காரில் மிளகாய் பொடி தூவி ரூ.1.5 கோடி கொள்ளையடித்த விவகாரம்.. குற்றவாளிகள் கைது.!
Nellai 1.5 crore robbery accused arrested
திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). இவர் அந்தப் பகுதியில் நகை கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த விற்பனை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி காலை நகைகள் வாங்குவதற்காக கேரளா மாநிலத்திற்கு தனது 2 உதவியாளர்களுடன் காரில் சென்றுள்ளார்.
அப்போது நெல்லையில் இருந்து இவரது காரை பின் தொடர்ந்து முன்னும் பின்னும் 2 கார்கள் வந்துள்ளன. அப்போது நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் வரும் போது திடீரென முன்னும் பின்னும் வந்த இரண்டு கார்களிலும் வந்த முகமூடி கும்பல் சுஷாந்தின் காரை வழிமறித்து அவர் மீது மிளகாய் பொடி தூவி கடுமையாக தாக்கினர்.

அதன் பின்னர் காரின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்து ஒன்றரை கோடி ரூபாயை திருடன் முயற்சி செய்தனர். இதில் சுஷாந்த் கத்தி கூச்சலிட அந்த வழியாக வந்த தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மற்றும் பயணிகள் உடனடியாக ஓடி வந்து கொள்ளையர்களை பிடிக்க முயற்சித்தனர்.
இதனையடுத்து முகமூடி கொள்ளையர்கள் சுஷாந்தை அவரது காரில் கடத்திச் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் சுஷாந்தை நடுவழியில் இறக்கி விட்ட அந்த மர்மக்கும்பல் நாகர்கோவில் நோக்கி சென்றுள்ளனர். மேலும் தொடர்ந்து சென்றால் நாங்குநேரி சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமராவில் மாட்டிக் கொள்வோம் என்பதை அறிந்த கொள்ளையர்கள் சுங்கச்சாவடிக்கு முன்பே உள்ள நெடுங்குளம் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பினர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் நாங்குநேரி போலீசருக்கு தகவல் தெரிவித்த நிலையில் இந்த தாக்குதலில் காயம் அடைந்த நெல்லையில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுஷாந்திடம் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் கொள்ளையடிக்கப்பட்ட முகமூடி கொள்ளையர்களை பிடிக்க நாங்குநேரி டிஎஸ்பி ராஜூ தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் குற்றவாளிகள் கேரள மாநிலம் மூணாறில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் மூணாறில் வைத்து 2 கொள்ளையர்களை கைது செய்துள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட கொலையாளிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Nellai 1.5 crore robbery accused arrested