அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி தொடங்காத அவலம்.!! செவி சாய்க்குமா தமிழக அரசு.!!
NEET coaching classes have not been started in govt schools
தமிழக முழுவதும் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகள் தொடங்கி 3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்படாத சூழல் நிலவி வருகிறது.
தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழு புள்ளி ஐந்து விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மருத்துவ படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சிகள் உரிய காலத்தில் ஆரம்ப கட்ட பணிகள் கூட தொடங்கப்படவில்லை எனவும், இடைநிலை நீடித்தால் எதிர்வரும் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி கேள்விக்குறியாகும் எனவும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து கூடிய விரைவில் பயிற்சி வகுப்புகளை தொடங்க வேண்டும் எனவும் மாணவர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
English Summary
NEET coaching classes have not been started in govt schools