வில்லிவாக்கம் அருகே போலி நகையை விற்க முயன்ற இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே உள்ள திருவொற்றியூர் காலடிப்பேட்டை காவேரி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். பழைய இரும்பு கடை நடத்தி வரும் இவரிடம் மர்ம நபர்கள் இரண்டு பேர் பழைய இரும்புகளை எடைக்கு போட்டு பணம் வாங்கியுள்ளனர். 

அப்போது அந்த மரநபர்கள் தாங்கள் களிமண் எடுக்க சென்றபோது தங்களுக்கு தங்கப்புதையல் கிடைத்ததாகவும், அதை விற்பனை செய்ய வேண்டும் என்றும் பாலமுருகனிடம் தெரிவித்துள்ளனர். அதனை உண்மை என்று நம்பிய பாலமுருகன், அந்த நகையை தானே வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்று வில்லிவாக்கம் அருகே உள்ள பாலியம்மன் கோவில் அருகில் பாலமுருகனை வரவழைத்து, சுமார் 2 கிலோ எடை உள்ள தங்க முத்துமாலையை அவரிடம் கொடுத்தனர். ஆனால் அந்த நகை மீது பலமுருகனுக்கு சந்தேகம் எழுந்தது. அதன்பின்னர் பாலமுருகன் இந்த சம்பவம் குறித்து வில்லிவாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். 

அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இரண்டு போரையும் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விற்க முயன்றது போலி நகை என்பது தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி நகையை விற்க முயன்ற சென்னை அம்பத்தூர் நேரு நகர் நான்காவது தெருவை சேர்ந்த வீரூ மற்றும் அர்ஜுன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ போலி தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near villivakkam tew members arrested for duplicate gold sales


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->