பணத்திற்காக தொழிலாளி கொலை - கள்ளகாதலியுடன் சிக்கிய நபர்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள கருவம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் மனைவி சிவகாமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனைவி சிவகாமி உயிரிழந்துள்ளார். 

அதனால், கந்தசாமி தனது மகன்களுடன் திருப்பூர் பல்லடம் அருகே நொச்சிபாளையத்தில் உள்ள தனது சகோதரி ரேணுகா வீட்டில் குடியிருந்து கொண்டு கட்டிட வேலை செய்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கந்தசாமி சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து திருச்சியில் உள்ள அவரது உறவினர்களிடம் ரேணுகா மற்றும் அவரது குடும்பத்தினர் விசாரணை செய்த போது கந்தசாமி அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது. 

இதற்கிடையே, பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அவரபாளையம் பகுதியில் ஊர் பொது கிணற்றில் கந்தசாமி கொலை செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்து கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கந்தசாமியுடன் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அதில், ஒருவர் மட்டும் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தார்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் கந்தசாமியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். 

மேலும், இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த கரண் என்பதும், இவர் கந்தசாமியுடன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

கந்தசாமி தனது சொந்த ஊருக்கு சென்று பணம் கொண்டு வந்ததை அறிந்த கரண், தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து கந்தசாமியை கொலை செய்துள்ளார். அதன் பின்னர் கந்தசாமி வைத்திருந்த ரூ.10ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு உடலில் பாறாங்கல்லை கட்டி கிணற்றில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. 

பத்தாயிரம் ரூபாய் பணத்திற்காக கள்ள காதலியுடன் சேர்ந்து சகா தொழிலாளியைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near tirupur man and girl friend arrested for worker kill


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->