தேனி : மனைவியை குடும்பத்தோடு சேர்ந்து கொடுமைப்படுத்திய கணவர் உள்பட மூன்று பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டி பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோடாங்கிபட்டியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இரண்டு பேருக்கும் இது இரண்டாவது திருமணமாகும்.

இந்நிலையில், செந்தில்குமார் கோயம்புத்தூரில் உள்ள ஒரு நகை பட்டறையில் வேலை பார்த்து வந்ததால் குடும்பத்தோடு அங்கு வசித்து வந்தனர். அதன்பின்னர் செந்தில்குமார் திருமணத்தின்போது கொடுத்த 15 பவுன் நகையை ஜெயலட்சுமிக்கு தெரியாமல் செலவு செய்துள்ளார். 

இது குறித்து ஜெயலட்சுமி தட்டிக்கேட்டதால் செந்தில்குமார் மற்றும் அவரது தந்தை அப்பாவிமணி, தாய் ராஜம்மாள் உள்ளிட்டோர் அவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். 

மேலும் அவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளையும் பார்க்க விடாமல் அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். இது தொடர்பாக ஜெயலட்சுமி தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near theni three peoples arrested for woman harassment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->