புதுக்கோட்டை || மின்னலால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


தற்போது, தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே இடி மின்னலுடன் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் பாதிப்பும் அதிகமாக உள்ளது. 

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை அருகே உள்ள மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி கோகிலா வயது 40. இவர் தான் வளர்த்து வந்த பசு மாட்டை வயல் பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். 

அப்போது, மதியம் இடி மின்னலுடன் மழை தொடங்கும் சூழ்நிலை இருந்ததால், மாட்டை வீட்டிற்கு ஓட்டிச் செல்ல புறப்பட்டுள்ளார். அப்பொழுது திடீரென மின்னல் தாக்கியதில் கோகிலாவும் அவரது மாடும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்து சென்ற உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் குறித்து வருவாய் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near puthukottai lady and cow died for lightining attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->