மதுரை || வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற என்ஜினீயர்.! தடுத்து நிறுத்தி களத்தில் இறங்கிய ஆசிரியை.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே ஒத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ டிரைவரான இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் நாகபிரியா பி.சி.ஏ. படித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 

இதையடுத்து, திருமங்கலம் பாண்டியன் நகரை சேர்ந்த வேலுச்சாமி மகன் சின்னசாமி. இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக நாகபிரியாவும், சின்னசாமியும் காதலித்து வந்துள்ளனர். இதனால், சின்னசாமி நாகபிரியாவுடன் உல்லாசமாக இருந்து வந்ததில், தற்போது நாகபிரியா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். 

இதற்கிடையே சின்னசாமியின் பெற்றோர், அவருக்கும் விருதுநகரை சேர்ந்த மற்றொரு பெண்ணிற்கும் திருமணம் செய்வதற்காக நிச்சயம் செய்த நிலையில் இன்று காலை அவர்களுக்கு திருமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த நாகபிரியா, தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் திருமண மண்டபத்திற்கு வந்தார். அங்கு அனைவரின் முன்பும் சின்னசாமி தன்னை காதலித்து கர்ப்பமாகிவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக தெரிவித்தார். இதனால் சின்னசாமிக்கு நடைபெற இருந்த திருமணத்தில் குழப்பம் ஏற்பட்டு திருமணம் நடைபெறாமல் மண்டபத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 

இதுபற்றி திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணமக்கள் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் நாகபிரியா மற்றும் சின்னசாமி குடும்பத்தினரிடம் பேசி திருமணத்தை நிறுத்தினர். 

இதையடுத்து, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தலைமை காவலர் காஞ்சனா தேவி இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near madurai forgery lover marriage stop


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->