கோவை : ஓட்டலில் சிலிண்டர் கசிந்து மூதாட்டி உயிரிழப்பு.!
near covai woman died for fir accident in hotel
கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரை அடுத்த இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன் - சாந்தி. இவர்கள் இருவரும் அதே பகுதியில் உணவு கடை ஒன்று வைத்து நடத்தி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் வழக்கம் போன்று கடையில் உணவு சமைத்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கியாஸ் சிலிண்டரிலிருந்து கசிவு ஏற்பட்டு சாந்தி மீது தீ பிடித்தது. இந்தத் தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ராஜன் ஓடி வந்து தீயை அணைப்பதற்கு முயற்சி செய்தார். ஆனால், அப்போது ராஜன் மீதும் தீ பிடித்தது. இதனால், வலியால் இரண்டு பேரும் கூச்சலிட்டதில், அவர்களின் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்தனர்.
அதன் பின்னர் அவர்கள் தீயை அனைத்து இரண்டு பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அதில், நேற்று சாந்தி மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near covai woman died for fir accident in hotel