நீலாங்கரை : கடற்கரையில் வாலிபரிடம் பண மோசடி செய்ததில் 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் ஜெயராம் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது உசேன். இவர், ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். 

இவர், கடந்த 11-ந் தேதி இரவு நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள கிழக்கு கடற்கரையில் தனது தோழியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் இவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். 

அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று முகம்மது உசேன் தெரிவித்ததால் அந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி விட்டு, அவர் வைத்திருந்த பர்ஸை பிடுங்கி அதில் இருந்த 600 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டனர். மேலும் அவரது செல்போனை பறித்து அதில் உள்ள மொபைல் செயலி மூலம் தங்களது வங்கி கணக்கிற்கு ரூ.40 ஆயிரத்தை அனுப்பிவிட்டு தப்பி ஓடினர். 
 
இதையடுத்து உசேன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர் வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறி பழைய குற்றவாளிகளான பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த உதயகுமார் மற்றும் விக்னேஷ் உள்ளிட்டோரை கைது செய்தனர். மேலும் தினேஷ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai two peoples arrested for money fraud in neelangarai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->