ஆர் .எஸ் .எஸ் இயக்கத்தை பற்றி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் - தொல். திருமாவளவன்  - Seithipunal
Seithipunal


இன்று தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற இருந்தது. இந்த பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்த நிலையில், பேரணியை சுற்றுச்சுவர் கொண்ட மைதானத்துக்குள் நடத்த வேண்டும் என்ற நிபந்தனை வழங்கியதால் ஆர்.எஸ்.எஸ் பேரணியை தள்ளி வைத்து விட்டு உயர்நீதிமன்றத்தில்  மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த இருந்த இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்களை தனது கட்சி சார்பில் வழங்கப்போவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

அந்த அறிவிப்பின் படி திருமாவளவன் இன்று "மனுஸ்மிருதி" புத்தகங்களை வழங்கி வருகிறார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்ததாவது:- 

"நாங்கள் ஆர்.எஸ்.எஸ். பேரணியை தான் எதிர்க்கிறோம்", ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ் எப்படிப்பட்ட இயக்கம் என்பதை தமிழக மக்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். இதுவரை நாங்கள்  பாஜக பேரணியை எதிர்த்தது இல்லை, ஆனால் ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்க்கிறோம், மக்கள் ஆர்.எஸ்.எஸ் பற்றி புரிந்து கொண்டால் இந்தியாவிலேயே அது இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chennai thirumavalavan give manamisruti book to people


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->