தவறான நோக்கத்திற்கு முதலமைச்சர் தடைக்கல்லாக இருப்பார் - அமைச்சர் சேகர் பாபு பேட்டி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் அமைச்சர் சேகர்பாபு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

தமிழகத்தில் கடந்த மாதம் இருபத்து ஒன்பதாம் தேதி முதல் பருவமழை தொடங்கிய நிலையில், வருகிற 9-ந்தேதி கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, இந்த மழையை சமாளிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்த பருவமழை காலங்களில் சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பருவமழைக்கு பிறகு சிறிய பள்ளங்களை சரி செய்து சாலைகள் அமைக்கப்படும். 

இதையடுத்து, புளியந்தோப்பு, சவுகார்பேட்டை பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, இந்த கட்டிடமானது மிக பழமையான கட்டிடமாகும்.

இந்தக் கட்டிடத்தை அப்புறப்படுத்துவது குறித்து ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சென்னை மாநகராட்சியும் இந்த கட்டிடத்தை இடிப்பதற்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது. இருப்பினும் கீழமை நீதிமன்றத்தில் ஒப்புதல் பெற்று பொதுமக்கள் குடியிருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் பழமையான கட்டிடத்தில் குடியிருக்கும் பொதுமக்களைக் கண்டறிந்து அவர்களை மாற்று இடத்தில் தங்க வைப்பதற்கு வடகிழக்கு பருவமழைக்கு முன்பே முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

அந்த அறிவிப்பின்படி பொதுமக்களை மாற்று இடத்தில் தங்க வைப்பதற்கு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும், வீட்டின் உரிமையாளர்கள் கட்டிடம் சார்ந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறேன். 

மேலும், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துபவர்களுக்கு மக்களை பற்றிய எந்த கவலையும் இல்லை. அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு வகையில் பிரச்சினையை ஏற்படுத்தி மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கம்.

இப்படிப்பட்ட நோக்கம் நிறைவேறுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் தடைக்கல்லாக இருப்பார். தமிழகம் அமைதி பூங்காவாக தொடர்ந்து irukka அவர் எல்லா விதத்திலும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்" இவ்வாறு அவர் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chennai minister sekar babu press meet


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->