மு.க. ஸ்டாலினை சந்திக்கும் நயினார் நாகேந்திரன்!
Nayanar Nagendran meeting MK Stalin Russian President Putin speaking about Trump with Prime Minister Modi
துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கக் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைப்பேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் பேசியதாவது; தமிழர்களுக்கு உயர்வு என்று வரும் போது தள்ளி நிற்பது என்பது எந்தவகையில் பொருத்தமாக இருக்கும்? முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கக் கோரிக்கை வைப்பேன் என்று கூறினார்.
முன்னதாக நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து பலமான தேசியக்குரல் அதிகாரமிக்கதாக இருக்க வேண்டுமென நினைத்து தற்போது துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழக மண்ணின் மைந்தரும், மஹாராஷ்டிர கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகியுள்ளது வரலாற்று சிறப்புமிக்க தருணம்என்றுகூறியுள்ளார் .
மேலும் ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளைத் தாண்டி எல்லோரும் ஆதரித்தோம் என்று வரலாற்றில் பேசப்பட்டால், அது ஒரு ஆரோக்கியமான அரசியலை ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டுள்ள நயினார் நாகேந்திரன். இதற்கு இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆதரவு தருவது சிறப்பானதாக இருக்கும் என கூறினார் . ஆகவே, கட்சி வித்தியாசங்களைத் தாண்டி, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.,க்களும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Nayanar Nagendran meeting MK Stalin Russian President Putin speaking about Trump with Prime Minister Modi