துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?.. ‘இந்தியா’ கூட்டணியில் இழுபறி!
Who is the candidate for the Deputy President? Stalemate in the India coalition
அரசியல் பிரமுகர்களை தவிர்த்து பிற நபர்களை துணை ஜனாதிபதி வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.
நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அவர் கடிதம் அனுப்பினார்.
இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் இருந்த நிலையில் திடீரென ஜெகதீப் தன்கர் பதவி விலகியது மத்திய பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது.
அதன்படி, புதிய துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. அன்றியத்தினம உடனே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களம் காண்கிறார். எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்தக்கூடும் என பேசப்படுகிறது.
இதுபற்றி முடிவு எடுப்பதற்காக இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்கள். பல்வேறு தலைவர்கள் இதில் கலந்துகொண்டு விவாதித்தனர். தலைவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் இதுதொடர்பான கூட்டத்தை இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் மதியம் 12:30 மணிக்கு வைத்துக்கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டது.அரசியல் பிரமுகர்களை தவிர்த்து பிற நபர்களை நிறுத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.
English Summary
Who is the candidate for the Deputy President? Stalemate in the India coalition