'உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண் பட்டதாரிகளைக் கொண்ட நாடு இந்தியா'; பிரதமர் மோடி பெருமிதம்..! - Seithipunal
Seithipunal


டில்லியில் நடந்த சர்வதேச ஆர்ய மகா சம்மேளனம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாளையும், ஆர்ய சமாஜத்தின் சமூக சேவையின் 150 ஆண்டுகளையும் நினைவுகூரும் வகையில் சர்வதேச ஆர்ய மகா சம்மேளனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். 

அப்போது, அறிவியல், தொழில்நுட்பத்துறையில் இப்போது இந்தியப்பெண்கள் தலைமைப்பொறுப்பு வகிக்கின்றனர். உலகிலேயே அதிக பெண் பட்டதாரிகளை கொண்ட நாடு இந்தியா என்று பெருமிதமாக கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் அவர் மேலும் பேசியதாவது: சுவாமி தயானந்த சரஸ்வதியின் பாதங்களில் வணங்கி அவருக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவரது 200-வது பிறந்தநாள் விழாவைத் தொடங்கி வைக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு நாட்களுக்கு முன், ஜனாதிபதி திரவுபதி முர்மு ரபேல் போர் விமானத்தில் பயணித்தார். இந்திய விமானப் படையின் ஸ்குவாட்ரன் லீடர் ஷிவாங்கி சிங் ரபேல் போர் விமானத்தை இயக்கினார். இன்று, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண் பட்டதாரிகளைக் கொண்ட நாடு இந்தியா என்று நாம் பெருமையுடன் கூறலாம் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் பெண்கள் தலைமை பொறுப்பு வகிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, அரசியல் காரணங்களால், சுதந்திரப் போராட்டத்தில் ஆர்ய சமாஜத்தின் பங்கிற்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும், அதன் தொடக்கத்திலிருந்து இன்று வரை, ஆர்ய சமாஜம் தேசபக்தர்களின் அமைப்பாக இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியா முன்னேற வேண்டுமானால், நமது சமூகங்கள் இடையே உள்ள அடிமைத்தனத்தை அகற்ற வேண்டும் என்பதை சுவாமி தயானந்த சரஸ்வதி அறிந்திருந்தார். எனவே, சுவாமி தயானந்த சரஸ்வதி ஜாதி, தீண்டாமை மற்றும் பாகுபாட்டைக் கண்டித்தார் என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார். 

நிகழ்வில், தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்தநாளையும், சமூகத்திற்கு ஆர்ய சமாஜம் ஆற்றிய 150 ஆண்டுகால சேவையையும் குறிக்கும் வகையில்நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi is proud that India has the largest number of female graduates in the world


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->