AUSvIND: இந்திய அணி படுதோல்வி! ஷிவம் துபேவின்  அதிர்ஷ்டம் முடிவுக்கு வந்தது! 
                                    
                                    
                                   AUS v IND shivam dube 
 
                                 
                               
                                
                                      
                                            ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் தீவிர ஆட்டத்தைக் சமாளிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹேசில்வுட் 3 விக்கெட்டும், எல்லீஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா, 18.4 ஓவர்களில் 126 ரன்களை எட்டிச் சாதனையுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்த தோல்வி, இந்திய அணிக்கான ஒரு சிறப்பு தொடரை முடிவுக்கு கொண்டுவந்தது. 2019ம் ஆண்டு முதல் இந்திய ஆட்டத்துக்குழுவில் இடம்பெற்றிருந்த ஷிவம் துபே பங்கேற்ற போட்டிகளில், இதுவரை இந்தியா தோல்வி கண்டதில்லை.
துபே ஆடிய 60 டி20 ஆட்டங்களில், 3 முடிவில்லாமல் போனவை தவிர்த்து, இந்தியா 56 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் தான் இந்திய அணிக்கு முதல் தோல்வி ஏற்பட்டு உள்ளது.
இந்த தோல்வியுடன் துபேவின் அபூர்வமான அதிர்ஷ்டம் முடிவுக்கு வந்துள்ளது.