'கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு யார் தடையாக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்': உயர்நீதிமன்ற கிளை கடும் எச்சரிக்கை..! 
                                    
                                    
                                   High Court branch issues stern warning that legal action will be taken against anyone who obstructs the removal of temple land encroachments
 
                                 
                               
                                
                                      
                                            கரூர் வெண்ணைமலை பால சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலங்களை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்கள் கட்டடம் கட்டி ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.
இதனை வேல்முருகன், புகழேந்தி நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாகவும், பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், பல ஆண்டுகளாக இதேபோன்ற பதிலைத் தான் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வழக்கில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா ரத்து யெ்து இருந்தாலும் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், பட்டா ரத்து செய்து இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தாலும் எந்தவிதமான தடையும் இல்லை. ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு யார் தடையாக இருந்தாலும், அச்சுறுத்தலாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உய்ரநீதிமன்றம் தயக்கம் கொள்ளாது என்றும் அறிவித்துள்ளனர். அத்துடன், கோவில் சொத்துகளை உடனடியாக மீட்க வேண்டும் என்றும், கரூர் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அதிகாரிகள் பணி செய்ய தவறினால், களத்திற்கு வந்து ஆய்வு செய்ய நேரிடும், என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       High Court branch issues stern warning that legal action will be taken against anyone who obstructs the removal of temple land encroachments