குழந்தை இல்லை என தகராறு; விஷ ஊசி போட்டு மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ள நாமக்கல் நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


நாமக்கல், ராசிபுரம் அருகே நாமகிரிப் பேட்டையைச் சேர்ந்த 30 வயதானவர் ராஜேஷ். மருந்துக் கடை நடத்தி வரும் இவருக்கு பிரியா என்பவருடன் திருமணமாகி 03 ஆண்டுகள் ஆகிய நிலையில், தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி பிரியா தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணை படி, குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி பிரியாவை, கணவர் ராஜேஷ் விஷ ஊசி போட்டு கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து காவல் துறையினர் கணவன் ராஜேஷை கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சமீபத்தில் வழக்கு மீதான விசாரணை நிறை வடைந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேஸூக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அபராதத்தைக் கட்டத் தவறினால் கூடுதலாக 06 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Namakkal court sentences husband to life imprisonment for killing wife with poisonous injection


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->