சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை! கணக்கில் வராத ரூ.2.80 லட்சம் பறிமுதல்!
naccounted Rs 280 lakh seized in Periyanaickenpalayam sub registrar office
பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவில் மோசடிகள் நடப்பதாகவும், நில ஆவணங்களில் போலியாக திருத்தங்கள் செய்து பதிவு செய்வதாகவும் பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் வாங்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் நேற்று இரவு திடீரென பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை செய்தனர்.

அலுவலகத்தின் கதவுகளை அடைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே இருப்பவர்களை வெளியே செல்லக்கூடாது என்று கூறி சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள விகிதங்களின் தீவிரமாக சோதனை செய்தனர் பின்னர் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான ஆவணங்களை கேட்டு அலுவலகத்தில் இருந்த சப் ரிஜிஸ்டரரிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
சோதனையை முடித்துக் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சப்ரிஜிஸ்டர் அருணாவை கோவை பெரியகாயக்கன் இடத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ஆஜராகும் படி தெரிவித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
naccounted Rs 280 lakh seized in Periyanaickenpalayam sub registrar office