#சென்னை || ரவுடி கிடைக்காததால் உறவினரை வெட்டிய மர்ம கும்பலால் பரபரப்பு!
mysterious gang attack relative cause could not find rowdy
சென்னை விருகம்பாக்கத்தில் முன்விராத காரணமாக ரவுடியை கொலை செய்ய தேடி வந்த கும்பல் அவர் கிடைக்காததால் உறவினர்களை வெட்டுவிட்டு தப்பி ஓடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விரும்பாக்கம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி யமஹா விக்கியை மற்றொரு குற்றவாளியான அலர்ட் சின்னத்தம்பி தரப்பினர் இரு சக்கர வாகனத்தில் தேடி அலைந்துள்ளனர்.

இதில் அவர் கிடைக்காததால் இருசக்கர வாகனத்தில் சென்ற யமஹா விக்கியின் உறவினர் ஹரி கிருஷ்ணன் மற்றும் அவருடைய நண்பர் மகாராஜனை வழிமறித்த யமஹா விக்கி குறித்து அவர்களிடம் விசாரித்துள்ளனர். விக்கி குறித்து அவர்கள் உரிய பதில் அளிக்காததால் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது படுகாயம் அடைந்த இருவரும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
mysterious gang attack relative cause could not find rowdy