துரைசாமியின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் - வைகோ பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


துரைசாமியின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் - வைகோ பரபரப்பு பேட்டி.!

மதிமுகவில் நடைபெறும் வாரிசு அரசியலை கண்டித்து நேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு அவை தலைவர் துரைசாமி எழுதிய கடிதத்தில், "மதிமுகவை அதன் தாய் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னிச்சையாக எடுக்கும் நடவடிக்கைகளால் கட்சி பாதிக்கப்படுவது குறித்து எழுதிய கடிதங்களுக்கு இன்னும் பதில் வரவில்லை" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்த கடிதம் மதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கடிதத்தை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று மதிமுகவின் தலைமை நிலைய செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "மதிமுக முக்கிய காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் 70 சதவீதம் மதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அவைத் தலைவர் துரைசாமி அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளராக நான் அலட்சியப்படுத்துகிறேன். இரண்டு வருடங்களாக கட்சிக்கு வராமல் இருந்த அவர் தற்போது அறிக்கையை வெளியிட்டுள்ளார். திமுகவுடன் மதிமுகவை இணைக்கும் நோக்கம் எங்களுக்கு கிடையாது.

நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்துகிறோம். எல்லா இடங்களிலும் தேர்தல் அமைதியாக ஒற்றுமையாக நடந்தது. இனிமேல் துரைசாமியின் பேச்சுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mtmk general secratery vaiko press meet


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->