கடன் பிரச்னையால் 02 பிள்ளைகளின் தாய் எடுத்த விபரீத முடிவு: போலீசார் விசாரணை..!
Mother of 2 children commits suicide due to debt problem near Arumanai
அருமனை அருகே மாத்தூர்கோணத்தை அடுத்த வட்டவிளையை சேர்ந்தவர் 48 வயதான விஜயகுமார். இவர் பழைய இரும்பு பொருட்களை சேகரித்து விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவியான விஜயகுமாரி 41 வயது.
குறித்த தம்பதிக்கு 02 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பிளஸ் 02 படித்து வருவதோடு, 02-வது மகன் 08-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். 08 வகுப்பு படிக்கும் 02-வது மகன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அதனால் பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கணவன், மனைவி பல்வேறு இடங்களில் ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், மனைவியான விஜயகுமாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் உரிய நேரத்தில் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்தவர்கள் வந்து பணத்தை செலுத்துமாறு கண்டிப்புடன் கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனால் விஜயகுமாரி மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று இரவு வழக்கம்போல் வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளனர். 12 வகுப்பு படிக்கும் மகன் இன்று சுற்றுலா செல்வதாக இந்தநிலையில், இதனால் அதிகாலை சுமார் 02.30 மணி அளவில் எழுந்துள்ளான். பின்னர் அவன் தாய் படுத்திருந்த அறைக்கு சென்றுள்ள நிலையில், அங்கு தாய் விஜயகுமாரி வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு கதறி துடித்துள்ளார்.

அவரது சத்தம் கேட்டு கணவன், 02-வது மகன் ஓடி வந்து அவர்களும் கதறிய நிலையில், சிறிது நேரத்தில் அக்கம் பக்கத்தினர் திரண்டுள்ளனர். இதுகுறித்து அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார்.
உயிரிழந்துள்ள விஜயகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் விஜயகுமாரி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mother of 2 children commits suicide due to debt problem near Arumanai