செல்போன் டவர் அமைப்பதாக முதியவரிடம் பண மோசடி - தூத்துக்குடியில் பரபரப்பு.!!
money fraud to old man for cellphone tower in thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முதியவரும், நில உரிமையாளருமான ஒருவருடைய செல்போனில், தங்களது நிலத்தில் செல்போன் டவர் அமைத்தால் வருமானம் பெறலாம் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து அந்த முதியவர் அந்த நபரை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் தான் ஒரு தள பொறியாளர் என்றும் உங்களது நிலத்தில் செல்போன் டவர் அமைத்து வருமானம் பெற்றுத் தருவதாக கூறியதுடன், மேலும் சில நபர்களை அந்த முதியவருக்கு அறிமுகப்படுத்தி செல்போன்டவர் அமைப்பதற்கு ஆவண கட்டணம், பொருட்கள் செலவு, போக்குவரத்து கட்டணம், நியமன கட்டணம் போன்ற பல்வேறு காரணங்களை கூறியுள்ளனர்.
இதனை உண்மை என்று நம்பிய முதியவர் அந்த மர்ம நபர்களின் ஆசை வார்த்தையை நம்பி ரூ.11 லட்சத்து 15 ஆயிரத்து 720 பணத்தை செல்போன் டவர் அமைப்பதற்காக கொடுத்துள்ளார். ஆனால், செல்போன் டவர் வைக்காததால் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த முதியவர் சம்பவம் குறித்து NCRP-ல் புகார் பதிவு செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேற்கு டெல்லி, திலக் நகர், சான்ட் ஹார்க் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்ஷா மகன் நாராயன் குமார்ஷா, மேற்கு டெல்லி, கயாலா பகுதியைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் குப்தா மகன் தீபக் மற்றும் சிலர் சேர்ந்து முதியவரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் குற்றவாளிகள் 2 பேரையும் 2.5.2025 அன்று டெல்லியில் வைத்து கைது செய்து, அவர்களை தூத்துக்குடி அழைத்து வந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
money fraud to old man for cellphone tower in thoothukudi